Description
மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் மார்க் ட்வைன் எழுதிய டாம் சாயரின் சாகசங்கள் என்ற அற்புதமான நூல் போலவே, இந்த நூலும் ஒரு சிறுவனின் சாகசப் பயணத்தைப் பற்றிப் பேசுகிறது. இவன் டாம் சாயரின் நண்பன். அமெரிக்கப் புனைவு இலக்கியங்களில் சிறந்த படைப்பாக பாராட்டப்பட்ட நூல். அமெரிக்காவின் தென் மாகாணங்களில் அடிமைத் தனம் கோலோச்சிய காலத்தில், ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர் மிக மோசமாக நடத்தப்பட்ட காலத்தில், அவர்கள் காசுக்கு விற்கப்பட்டு பண்ணைகளிலும், வீடுகளிலும் விலங்குகள் போல் நடத்தப்பட்ட காலத்தில், இந்தக் கதையின் நாயகனான சிறுவன் ஹக் ஃபின், ஜிம் என்ற அடிமையைக் காப்பாற்றவும் அவனுக்கு விடுதலை வாங்கித் தரவும் முயல்கிறான். விறுவிறுப்பாகச் செல்லும் கதை நம்மை அதனோடு ஒன்ற வைக்கிறது.