கவிதையின் திசை வழிகள்

Save 5%

Author: சா.தேவதாஸ்

Pages: 214

Year: 2025

Price:
Sale priceRs. 265.00 Regular priceRs. 280.00

Description

பகிர்தல், நட்பு சார்ந்த வட்டத்திற்குள் மட்டும் இருக்கையில், கவிஞனோ எழுத்தாளனோ உருவாகி வருவதில்லை. முகம் தெரியாத வாசகனுக்கும் பகிர்தல் நடைபெற வேண்டும். தன் காலத்தில் படைப்பாக வெளிவர முடியாத போதும் எழுதியிருப்பவர்கள் சென்ற தலைமுறைகளில்/நூற்றாண்டுகளில் உண்டு தன்னை முன்னிறுத்துவதாக இல்லாமல் எழுத்து இருக்க வேண்டும். சொல்லப்படாத விஷயங்கள் இருக்கின்றன. சொல்ல முடியாத சூழல் இருப்பதால், மறைந்தும் மறந்தும் மறைக்கப்பட்டும் போன ஆளுமைகள்/விஷயங்கள் இருக்கின்றன. இவர்களை எல்லாம்/இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும். உங்களுக்குமுன்நிறையபேர் நிறைய எழுதியிருக்கிறார்கள். இவர்கள் சொல்லாததைச் சொல்ல உங்களிடம் வார்த்தை இருக்கின்றதா என்று கேட்டுவிட்டு எழுதத் தொடங்கினாலே விஷயம் சரியாகிவிடும். இதை எழுதாவிட்டால், என்னால் இனி சுவாசிக்க முடியாது என்னும் தருணத்தில் நீங்கள் உங்களை உணர்ந்தால் எழுதி விடுங்கள். - சா. தேவதாஸ்

You may also like

Recently viewed