Description
ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடுதலை என்ற சொல்லாடலில் அறம், நீதி, நியாயம், சாந்தம் போன்ற கருத்தாக்கங்களின் தேவையையும் அவற்றை அயோத்திதாசர் எவ்வாறு திறம்படத் தன்வாழ்நாளில் நிறைவேற்றினார் என்பதையும் இந்நூல் எடுத்துரைக்கின்றது. இதிலுள்ள கட்டுரைகள் அயோத்திதாசரின் கருத்துகளில் பெரும்பாலானவை இன்றைய அரசியல், சமுதாயச் சூழல்களிலும் ஏற்புடையவை என்பதை நிலைநாட்டும். இன்றும் நிலவிவரும் சாதிக் கொடுமையிலிருந்து விடுதலை அடைவதற்காக அயோத்திதாசர் காட்டிய அறவழியை இளந்தலைமுறையினர் அறிந்துகொள்வதற்கான ஒரு சிறந்த வழிகாட்டி அன்னார் தம்முடைய நூல்களின் மூலம் விடுத்துள்ள அன்பும் பணிவும் நிறைந்த விண்ணப்பம் இன்றும் முற்றும் பொருந்துவதென்பதை இந்நூலின் கட்டுரைகளைப் படிப்பார் உணரலாம். மேலும், இந்நூல். அயோத்திதாசர் தொடர்பான ஆய்வுகளைப் பல்வேறு அறிவியல் புலங்களுக்குள் அறிமுகம் செய்யும் முயற்சியாக அமைகின்றது.

