Description
அகஸ்தியர் என்ற கட்டுக்கதை தோன்றியவிதம், அது ஊதி ஊதிப்பெருக்கப்பட்டு, தமிழ் மொழியின் முதல் இலக்கணத்தை எழுதியவராக அவரை முன்னிறுத்துவதன் நோக்கம் ஒன்றுதான்- அதாவது. தோற்றத் தொன்மையும் தொடரும் இளமையும் எனும் இருசிறப்புகளோடு இன்றும் செழிக்கும் செம்மொழியான தமிழிற்கே உரிய தனித்துவமான பெருமிதத்தின் மீது முத்திரை குத்தித் தனதாக்கி உரிமை கொண்டாடுவது தான். தமிழ் மக்களின் சமூக உளவியலின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது இந்த முயற்சி என்பதைத் தோலுரித்துக்காட்டும் பெரும்பணியைச் சிவராஜபிள்ளை செய்திருக்கிறார்.
இத்தகைய சூழலில் சிவராஜ பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய இந்த நூல் தமிழில் வெளிவருவது நிகழ்காலத்தின் தேவையாகும். இந்தப்பணியை மிக அருமையாகச் செய்திருக்கிறார் ஆய்வாளர் இஸ்க்ரா.