Description
காலத்தால் முற்பட்ட பள்ளு நூல்களில் செண்பகராமன் பள்ளு ஒன்று இந்த நூலின் பாட்டுடைத் தலைவன் கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் ஊரைச் சார்ந்தவன். குருகுல ஜாதிப் பரவனான இவன் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்தவன் இது பிற பள்ளு நூற்களில் இருந்து வேறுபட்டு நிற்பது. நாஞ்சில் நாட்டின் வழக்காறுகளும் பேச்சு வழக்குச் சொற்களும் கத்தோலிக்கரின் வரலாற்றுச் செய்திகளும் இந்நூலில் பெருமளவில் காணப்படுகின்றன. இந்தப் பள்ளு நூலில் 58 நெல் வகைகளும் 38 மாடுகளின் பெயர் வகைகளும் வருகின்றன. 17ஆம் நூற்றாண்டின் நாஞ்சில் நாட்டு பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்த நூல் என்ற சிறப்பு இதற்கு உண்டு.
மக்களின் தென்பாண்டி கடற்கரை கத்தோலிக்க சமய வழிபாடு தெய்வங்கள் விழாக்கள் ஆள் பெயர்கள் பற்றிய குறிப்புகள் இந்நூலில் வருகின்றன. இந்த நூல் விரிவான முகவுரை, பாடல்களுக்கு விளக்க உரை, குறிப்புரை, அடிக்குறிப்புகள் என அமைந்து செம்பதிப்பாக விளங்குகின்றது. இது 1943ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த செம்பதிப்பு நூலாகும்.