Description
திருக்குறள் நீதி இலக்கியம் என்னும் இந்நூல் ஒரு புதிய முயற்சி, நீதி இலக்கியம் என்ற நோக்கில் திருக்குறளை ஆராய்ந்து எழுதப்பெற்ற முழுமையான முதல் நூல் இது.
நீதி இலக்கியத்தின் இயல்புகளும், இலக்கிய உலகில் நீதி இலக்கியத்திற்குரிய இடத்தையும், திருக்குறள் நீதி இலக்கியமாக விளங்கும் திறத்தையும் இந் நூலாசிரியர் நன்கு தெளிவுபடுத்தியுள்ளார். மற்றும் உலகச் செம்மொழிகளுள் தலைசிறந்து விளங்கும் நீதி இலக்கியங்களோடு திருக்குறளை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ள பகுதி, திருக்குறளின் அருமை பெருமைகளை உலகிற்கு உணர்த்துவதாகும்.
இந்நூல் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் மேற்பார்வையில் திரு. க.த.திருநாவுக்கரசு நடத்திய ஆராய்ச்சியின் பயனாக வெளி வரும் ஆய்வுரையாகும்.

