Description
இந்த நூல் இருத்தலியம் பற்றிய மிகவும் எளிய அறிமுக நூல் ஆகும். இதில் ஒவ்வொரு இருத்தலியலாளரும் முன்வைத்த விளக்கங்களின் சாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அன்றைய இருத்தலியலாளர்கள் எதிர்கொண்ட சவால்களை விட இன்றைய உலகம் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். இந்த நிலையில், நாம் கீர்க்கிகார்ட் கூறிய நெருக்கடி வேளையில் எடுக்க வேண்டிய விசுவாச தாவல்', நிட்சேவின் 'கடவுள் இறந்துவிட்டார்' என்ற அறிவிப்பு. ஹைடெகரின் 'இருப்பு ஆய்வு', சார்த்தரின் 'சுதந்திரமும் பொறுப்பும்', காம்யுவின் 'அபத்த எதிர்ப்பு', ஜாஸ்பர்ஸின் 'எல்லை நிலைகள்', மார்சலின் 'உடல் சார்ந்த நம்பிக்கை', ஹூ ஸ்ரலின் 'நிகழ்வியல் அடித்தளம்' ஆகியவற்றிலிருந்து விலகி, ஒரு பெரிய கேள்வியை கேட்க வேண்டியுள்ளது. இன்றும் இருத்தலியம் முக்கியத்துவம் வாய்ந்ததா? என்ற கேள்வியே அது.