பால்யநதி

Save 6%

Author: சி. மோகன்

Pages: 0

Year: 2025

Price:
Sale priceRs. 405.00 Regular priceRs. 430.00

Description

தனிமை இருளிலிருந்து மூதாட்டி, கண்ணாடித் தாள் உறையொன்றை மிக நிதானமாகக் கசக்குகிறார். அந்த நுண்ணொலிப் பரவசத்தில் புன்னகையுடன் அரைக்கண் லயிக்கிறார். கேட்டிருந்த சிறுவனோ, ஒலிகளிலிருந்தான வாழ்வின் நதியை காலத்தினூடே நடத்திச் செல்கிறான். நதி விரல்களாகிப் பூத்தொடுக்கிறது: கரை மீறிச் சிதைக்கிறது. அதன் வனைதலின் அபூர்வங்கள் நம்மைத் திகைக்கச் செய்கின்றன. மிதக்கும் புதிர்கள் செருகுகின்றன மனதில். பெரியதொரு காலத்தின் சித்திரத்தை சுழல்களில் குறித்துக் காட்டி, ஒவ்வொரு நகர்விலும் ரகசிய கனம் கூட்டி, இறுதியில் துயராகும் நதியை சிறுவன் தானேயான இளைஞனிடம் கையளிக்கிறான். எங்கிருந்தெல்லாமோ அது சாத்தியமாக்கிக் கொண்ட உயிர்ப் பிம்பங்களை வியந்து நோக்குகிறான் இளைஞன். அப்போது மூதாட்டியின் விழிகள்நித்யத்தில் அடைகின்றன. அந்த வெறுமை வெளியெங்கும் மரகதம் அத்தையின் வாசனை நிறைகிறது... நாவலெனும் அதிமலரின் அரூப மகுடமாகவும்... - யூமா வாசுகி

You may also like

Recently viewed