Description
ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் கருப் பொருளாகவே அறிவியல் தமிழ் அமையும் என உறுதி கூறியதோடு காலத்தின் தேவை கருதி அன்று நான் ஆற்றிய உரையின் அடிப்படையில் ஒரு நூல் எழுதி வழங்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட நண்பர்களும் இதே கருத்தை வலியுறுத்திக் கூறினர். உற்சாக வார்த்தைகள் நூல் எழுத வேண்டும் என்ற என் எண்ணத்தை வலுப்படுத்தின. அறிவியல் தமிழ் தொடர்பான சிந்தனைகளுக்கு வரலாற்று அடிப்படைகளை ஆராய்ந்து கூறும் வகையில் என் சிந்தனைகளுக்கு எல்லை வகுத்து எழுதத் தொடங்கினேன். அதுவே. நூலுருவில் இப்போது உங்கள் கரங்களில் தவழுகிறது. அறிவியல் தமிழ் தொடர்பான எந்த முடிவையும் அறுதியிட்டு முடிவு செய்து கூறுவது இந்நூலின் நோக்கமல்ல. மொழி பெயர்ப்பு. ஒலிபெயர்ப்பு, சொல்லாக்கம், எழுத்துச் சீர்மை போன்றன. பலரும் நினைப்பதுபோல் தமிழில் புதிதாகத் தோன்றி வளர்ந்துவரும் இயல்கள் அல்ல. அவற்றின் அடித்தளம் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் இருந்தே வந்துள்ளன என்ற வரலாற்று உண்மையையும் அவற்றைக் காலத்தின் தேவை நிமித்தம் கட்டுக்கோப்பான வரன்முறைகளோடு கூடிய தனியியல்களாக வளர்க்க நாம் மேற்கொள்ள வேண்டிய சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் பரிமாறிக் கொள்வதேயாகும். எனது மற்ற நூல்களை ஏற்று ஆதரித்தது எனது மற்ற நூல்களை ஏற்று ஆதரித்தது போன்றே இந் நூலையும் வாசகர்கள் ஆதரித்து ஊக்குவிப்பார்கள் என நம்புகிறேன்.
- மணவை முஸ்தபா