Description
நாளது வரையில் வெளியான நாவல்களுள் எது தலைமை ஸ்தானம் வகிக்கிறது என்று கேட்டால் 'கமலாம்பாள் சரித்திரம்' என்று கூசாமல் சொல்லிவிடலாம். கமலாம்பாள் சரித்திரத்தின் வழியேதான் தமிழ் நாவல் சுடர் விட்டுக்கொண்டு போகிறது.
-ந. பிச்சமூர்த்தி
கமலாம்பாள் சரித்திரம் என்ற ஒரே நாவலின் மூலம் சென்ற நூற்றாண்டின் சிறந்த நாவலாசிரியர் என்ற புகழ் ஒருமுகமாகக் கிடைக்கப் பெற்ற நாவலாசிரியர் பி.ஆர். ராஜமய்யர். இந்த நாவலின் முதல் பதிப்பு அவர் காலத்திலேயே வெளிவந்திருக்கிறது. கமலாம்பாள் நாவலுக்குப் பிறகு அதோடு ஒப்பிடக் கூடிய தமிழ் நாவல் இன்னும் வரவில்லை.
-சி.சு. செல்லப்பா
கருத்துப் பிரச்சாரம் மேலோங்காத நாவல்; நுட்பமான நகைச்சுவையும் குணச்சித்திர வரைவும் கொண்டது; நுண்ணிய உளவியல் சித்தரிப்பும் அதில் சாத்தியமாகியிருக்கிறது என்றும் இந்திய மொழிகளின் முதல் கட்ட நாவல்களில் கமலாம்பாள் சரித்திரமே மேலானது.
-ஜெயமோகன்

