Description
களத்திலும் கதாப்பாத்திரத்திலும் தமிழ் வாசகன் மிக எளிதில் தன்னைப் பொருத்தி ரசிக்கக் கூடிய ஒற்றுமைகளுடனும் அதே வேளையில் அச்சமூகத்தின் நமது கலாசாரத்துடனான மெல்லிய வேற்றுமைகளையும் உணர்ந்து சுவைக்கக் கூடியதாக இருக்கின்றன சீனத்துச் சிறுகதைகள். பல இடங்களில் நகைச் சுவையுணர்வுடனிருக்கும் இச்சிறுகதைகள் நமது கலாசாரத்துடன் அதிக ஒற்றுமைகளையே கொண்டிருக்கின்றன என்பதையும் வாசிப்பவர் உணரலாம். சீனக் கலாசாரத்தைப் பற்றியும் அம்மனிதர்களின் வாழ்க்கை, நிலவெளி மற்றும் மனவெளிகளை ஓரளவிற்காவது தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்ள இந்நூல் கண்டிப்பாக உதவும்.

