Description
கீதையில் இடம்பெறும் முதல் ஆறு அத்தியாயங்களில் கற்பிக்கப்படும் ஜீவதத்துவ பாடல்களை மூலப்பொருளாக கொண்டு அப்பாடல்களின் தத்துவ விளக்கங்கள், உட்கருத்துகள் மற்றும் முக்கிய பாடல்கள் போன்றவற்றுடன் சில உதாரணங்களை சேர்த்தும் தேவைப்படுகிற இடங்களில் புராண மற்றும் மஹாபாரத இதிகாச நிகழ்வுகளை உள்ளபடி மேற்கோள்காட்டியும், மேம்பட்ட உலக வாழ்வுக்கு உகந்த வழிபாட்டு பாடல்களை சுட்டிகாட்டியும், ஸ்ரீமத் பகவத்கீதையை ஏன் வாசிக்க வேண்டும்? எவ்வாறு வாசிக்கலாம்? மற்றும் அதனால் கிடைக்கபெறும் நன்மைகள்? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாகவும், கூடுதலாக சில தத்துவ ரீதியான சிறுகதைகளை இணைத்து இறுதியாக மனிதனின் கருவூலத்தை பற்றிய குறிப்புகளுடன் வெவ்வேறு தலைப்புகளில் பல கட்டுரைகளை கொண்டு உலக வாழ்வை விரும்பி ஏற்று அதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வாழும் அனைவரும் எளிமையாக வாசித்து புரிந்து கொள்ளும்படி வடிவமைத்தது மட்டுமின்றி வேதநூலான ஸ்ரீமத் பகவத் கீதையை வாசிப்பதற்கு வழிகாட்டும் ஒரு கையேடாகவும் இப்புத்தகம் இயற்றப்பட்டு இருக்கிறது