Alla Alla Panam 6 - Mutual Fund/அள்ள அள்ளப் பணம் 6 மியூச்சுவல் ஃபண்ட்


Author: சோம. வள்ளியப்பன்

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 170.00

Description

எதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டே ஒவ்வொருவரும் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது முதல் எதிர்பார்ப்பு. நல்ல முறையில் பெருகி செழிக்கவேண்டும் என்பது இரண்டாவது எதிர்பார்ப்பு. இரண்டும் நிறைவேறுவதற்கு ஒரு நல்ல முதலீட்டுத் திட்டம்,

*மியூச்சுவல் ஃபண்ட் . மியூச்சுவல் ஃபண்ட் என்பது என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன? எது நமக்கானது என்பதை எப்படிக் கண்டறிவது? எந்த எந்த திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்வது?

*எங்கிருந்து தொடங்குவது? முன் அனுபவம் அவசியமா? எப்படிப்பட்ட பணிகளில் இருப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் ஆர்வம் காட்டலாம்?

*ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீடுகள் செய்யலாம் என்கிறார்களே, அது சரியான அணுகுமுறையா? ஆம் எனில் அதை எப்படிச் செய்வது?

*பண வீக்கம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை எப்படிக் கவனத்தில் கொள்வது?

முதலீட்டுக்கு எதைத் தேர்வு செய்யவேண்டும், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், அதை எவ்வளவு காலத்துக்கு விட்டுவைக்கவேண்டும் என்று அடிப்படைகள் தொடங்கி அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இந்நூல்.

வேறெதையும்விட பரஸ்பர நிதியில் கூடுதல் வருமானம் ஈட்டுவது சாத்தியம். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு மியூச்சுவல் ஃபண்ட் மிகவும் உகந்தது. நிதி மேலாண்மையில் நம்பர் 1 ஆலோசகராகத் திகழும் சோம. வள்ளியப்பனின் இந்நூல் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த ஒரு நல்ல அறிமுகத்தை அளிப்பதோடு முதலீட்டாளர்களின் கையடக்க உதவியேடாகவும் திகழ்கிறது.

You may also like

Recently viewed