தொழில் வல்லுநர்

Save 25%

Author: சுப்ரதோ பாக்ச்சி

Pages: 248

Year: 2014

Price:
Sale priceRs. 150.00 Regular priceRs. 200.00

Description

எல்லோராலும் ஏதேனும் ஒரு துறையில் கவனம் செலுத்தி, பயிற்சி பெற்று, அனுபவத்தின் மூலம் ஒருசில அம்சங்களில் பிரகாசிக்க முடியும். உயர் பதவிகளையும் நல்ல வருமானத்தையும் கூட ஈட்ட முடியும். ஆனால், தொழில் நேர்த்தி என்பது ஒரு சிலருக்கே கை கூடுகிறது.இந்த ஒரு சிலரால்தான் உலகம் அடுத்தடுத்த கட்டங்-களுக்கு முன்னேறிச் செல்கிறது. இந்த ஒரு சிலரில் நீங்களும் ஒருவர் ஆகலாம்.தொழில் என்பது வேலை மட்டுமல்ல, தனது பல்லாண்டுகால அனுபவம் முழுவதையும் குறிக்கும் ஒரு சொல் என்பது ஒரு தொழில் வல்லுநருக்குப் புரியும். அவர் ஒவ்வொரு நாளும் வளர்கிறார். ஒவ்வொரு நாளும் புதியசவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார். புதிய பாடங்கள் கற்கிறார்.வாழ்க்கையில், நிறுவனத்தில், தொழில் துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கிறார். தான் எடுக்கும் ஒரு தீர்மானம் நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று அவருக்குத் தெரியும்.எனவே அவர் சாதுர்யத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் திகழ்-கிறார். அலுவலகம் தாண்டி உலகமும் அதன் பிரச்னைகளும் சவால்-களும்கூட அவருக்குப் பரிச்சயமாக இருக்கிறது. தனது லட்சியத்-தோடும் மதிப்பீடுகளோடும் பொருந்தாத விஷயங்களோடு ஒத்துப்-போகமாட்டார். தனது எல்லைகள் அவருக்குத் தெரியும். தனது உடல், ஆன்மா, மனம் ஆகியவற்றின் மீது அவருக்கு அக்கறை இருக்கும். அதனால்-தான் அவர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு பிரகாசிக்கிறார்.சாஃப்ட்வேர், நிதி நிர்வாகம், வணிகம், மார்க்கெட்டிங், குழாய் ரிப்பேர் என்று நீங்கள் புழங்கும் துறை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களாலும் ஒரு ஃப்ரொபஷனலாக வளரமுடியும். இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல் அதனை அடைவதற்கான வழிமுறை-களையும் கற்றுக்கொடுக்கிறது இந்தப் புத்தகம்.மைண்ட் ட்ரீ என்னும் மென்பொருள் துறை நிறுவனத்தைத் தோற்றுவித்து வெற்றிகரமாக நடத்திவரும் சுப்ரதோ பாக்ச்சியின் இந்தப் புத்தகம் உங்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தப்போவது உறுதி.

You may also like

Recently viewed