Description
தமிழில்: சாருகேசிஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் சமூக, அரசியல் வரலாற்றை விவரிக்கும் இந்தப் புத்தகம் அதன் முப்பெரும் தலைவர்களாக கேசவ் பலிராம் ஹெட்கேவர், குரு கோல்வல்கர், பாலா சாஹிப் தேவரஸ் ஆகியோரின் காலகட்டத்தை விரிவாக விவரிக்-கிறது.புத்தகத்தின் நோக்கங்கள் மூன்று. முதலாவதாக, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் உருவான பின்னணி, உருவாக்கியவர்களின் கனவுகள், அவர்களுடைய சித்தாந்தத்தின் பலம் போன்றவற்றை முறைப்-படி அறிமுகப்-படுத்துவது.இரண்டாவதாக, ஆர்.எஸ்.எஸ்மீது சுமத்தப்படும் சில முக்கியக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிப்பது. காந்தியைக் கொன்றவர்கள், முஸ்லிம் விரோதிகள், பிராமண மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்-பவர்கள் என்றெல்லாம் திட்டமிட்டுப் பரப்பப்படும் செய்தி-கள் ஆதார-மற்றவை என்பதை வலுவான வாதங்கள்மூலம் இந்தப் புத்தகம் நிரூபிக்கிறது.மூன்றாவது நோக்கம், இயக்கத்தைக் கறாரான விமரிசனப் பார்வைக்கு உட்படுத்துவது. ஆர்.எஸ்.எஸ் இன்று செல்லும் பாதை சரியானதா? என்னென்ன குறைபாடுகள் அதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகின்றன? பலப்படுத்திக்கொள்ள இயக்கம் என்னென்ன செய்ய-வேண்டும்? என்பவை பற்றிப் பேசுகிறது.அடிப்படையில் ஒரு மருத்துவரான நூலாசிரியர் சஞ்சீவ் கேல்கர் 1967 தொடங்கி சுமார் 30 ஆண்டுக் காலம் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உறுப்-பின-ராக இருந்தவர். தனது ஆழ்ந்த அனுபவங்களையும் விரிவான ஆய்வையும் உள்ளடக்கி அவர் எழுதிய The Lost Years of the RSS நூலின் மொழிபெயர்ப்பு இது.ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஏற்பவர்கள், விமரிசிப்பவர்கள், நிராகரிப்பவர்கள் மூவரும் படிக்கவேண்டிய முக்கியமான ஆவணம்.