லஜ்ஜா அவமானம்

Save 9%

Author: தஸ்லிமா நஸ்ரின்

Pages: 232

Year: 2014

Price:
Sale priceRs. 250.00 Regular priceRs. 275.00

Description

தமிழில்: ஜவார்லால்டிசம்பர் 6, 1992 அன்று இந்து அடிப்படைவாதிகள் அயோத்தியில் பாபர் மசூதியைத் தரைமட்டமாக்கினார்கள். சுதந்தரம் அடைந்ததில் இருந்தே பெரும்பான்மை இஸ்லாமியர்களால் ஓரங்கட்டப்பட்டுவந்த பங்களாதேச இந்துக்களின் வாழ்க்கை, பாபர் மசூதி உடைப்பைத் தொடர்ந்து நரகமானது.இஸ்லாமிய மதவெறிக் கும்பல்கள் பங்களாதேசத்தில் வசிக்கும் ஒவ்வொரு இந்துவையும் தேடிப் பிடித்துத் தாக்கின. இந்துக்களின் உடமைகள் நிர்மூலமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இந்துப் பெண்கள் கொடூரமாகப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு மசூதி உடைப்புக்குப் பதிலடியாக ஓராயிரம் கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டன.இஸ்லாமிய கட்சிகள், இஸ்லாமிய நண்பர்கள், அரசியல் அமைப்புகள், ஊடகங்கள், கம்யூனிஸ்ட்டுகள் என அனைத்துத் தரப்பாலும் கைவிடப்-பட்ட இந்துக்களின் சோகம் உலுக்கியெடுக்கும் வகையில் இந்நாவலில் விவரிக்கப்பட்டுள்ளது.எதிரொலியாக, இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை முஸ்லிம்கள் பதிலடி கொடுக்கிறார்கள். பங்களாதேசத்தில் வாழும் சிறுபான்மை இந்துக்-களோ பெரும்பான்மை முஸ்லிம்களால் அடித்துக் கொல்லப்படு-கிறார்கள். இந்தியாவில் நடப்பது ஹிந்து முஸ்லிம் கலவரம். ஆனால் பங்களாதேசத்தில் நடப்பதோ ஹிந்து ஒழிப்பு. இதுவே இந்தியாவுக்கும் பங்களாதேசத்துக்கும் உள்ள வேறுபாடு. அதுவே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான வேறுபாடும்கூட என்ற உண்மையை இந்நாவலில் விவரிக்கிறார், பிறப்பால் முஸ்லிமான நாவலாசிரியர் தஸ்லிமா நஸ்ரின்.இந்துச் சிறுபான்மையின் வேதனை வரலாற்றை எவ்விதப் பாசாங்கு-மில்லாமல் பதிவு செய்யும் இந்த நாவல், மிக அபூர்வமான, முக்கியமான ஆவணமாகவும் இருக்கிறது..

You may also like

Recently viewed