நாவெல்லாம் நாலாயிரம் நினைவெல்லாம் நாராயணம் (2 பாகங்கள்)


Author: ராஜசேகரன்

Pages: 1040

Year: 2014

Price:
Sale priceRs. 500.00

Description

செந்தமிழ்ப் புரவலரின் இந்த ஸ்ரீ வைணவ வரலாறு, முன்னர் பெறப்பட்ட அனைத்து வைணவ வரலாற்றுச் செய்திகளையும் தழுவிக்கொண்டு ஓடிவரும் வைணவப் பிரவாகமாகக் காணப்படுகிறது.சில பிரவாகங்களுக்குக் கதைகளே இல்லை; இருக்கவும் முடியாது; சில விந்தைகளுக்கு ஆதி அந்தங்களே இல்லை. சிலபோது சில ஆதிகளே சில அந்தங்களில் உருக்கொள்கின்றன. வைணவ வரலாற்றுக்கும் இது நிச்சயம் பொருந்தும். வரலாற்றுத் தடங்களைத் தேடுவதிலும், பதிவு செய்தலிலும், வரலாற்று நோக்குகளுக்கு விருந்து செய்தலிலும் செந்தமிழ்ப் புரவலரின் இந்நூல் முன்நிற்கிறது.ஒரு முக்கியச் சமயம், இந்தியச் சமூகம்-அதன் நாகரிகம்-அதன் ஆன்மிகப் பண்பாடு- மானுட முன்னேற்றம் ஆகிய இவற்றின் மீது - தனது செல்வாக்குகளை அரசியல் - சமூகப் பொருளாதாரப் பின்புலங்களில் பதித்திருப்பதையும், பாதித்திருப்பதையும் அறியும்போது தான், அதன் தோற்றம் - வளர்ச்சி - வரலாறு பற்றிய மதிப்பீடுகள் தெளிவுறும்.இந்தியச் சமயங்களில் வைணவம், அதுகாட்டும் பக்தி - வழிபாடு - சடங்கு - இறைசார்ந்த கருத்துப் புலப்பாடுகள் - சமூக மறுமலர்ச்சிக்கு அது தந்தது, சமய மலர்ச்சிக்கு அது சமூகத்திடம் பெற்றுக் கொண்டது, இன்றும் வைணவத்தின் அதி உன்னத ஆன்மிகப் பண்பாடுகளை எல்லாம் விளங்கிடும் விதத்தில் பாஞ்சராத்திரம் - வைகானசம் என உருக்கொண்டு வளர்ந்த வைணவ வரலாற்றின் நெடிய வீச்சுகளை இந்நூல் பெற்றிருக் கிறது. நாராயணியமா? வசுதைவமா? விஷ்ணுவியமா? வடகலையா? தென்கலையா - எல்லாம் இதற்குள் விளக்கமுறுகின்றன.தமிழ்நாட்டில் மட்டுமின்றி - இந்தியா மட்டுமின்றி, அயல் நாடுகளில் வைணவம் பரவிய வரலாற்றுச் செய்திகளை விரிவாக விளக்கி, வைணவ வரலாற்றின் மீது அகில உலகப் பார்வையைச் செலுத்தியுள்ளது இந்தப் புத்தகம்.வைணவத்தின் நேற்று - இன்று - நாளைகள் எல்லாம் இந்நூலுள் விசுவரூபம் தந்து விளங்குகின்றன. மொத்தத்தில் இது ஒரு வைணவப் பெருவெளி! ஸ்ரீ வைணவ வரலாற்று நோக்கர்களுக்கு திரு. இரா. இராஜசேகரனார் தந்திருக்கும் ஒரு சொர்க்க வாசல்!

You may also like

Recently viewed