நவீன இந்தியாவின் சிற்பிகள்


Author: ராமசந்திர குஹா

Pages: 528

Year: 2014

Price:
Sale priceRs. 600.00

Description

தமிழில்: வி. கிருஷ்ணமூர்த்திஇந்தியாவில் ஒரே நேரத்தில் ஐந்து வெவ்வேறான புரட்சிகள் நடந்தன. அவற்றை நகர்ப்புறப் புரட்சி, தொழில் புரட்சி, தேசியப் புரட்சி, மக்களாட்சிக்கான புரட்சி, சமூக நீதிப் புரட்சி என வகைப்படுத்தலாம். நவீன இந்தியா என்பது இந்தப் புரட்சிகளின் விளைவாக உருவானதுதான்.· மகாத்மா காந்தி · ஜவாஹர்லால் நேரு · பி.ஆர். அம்பேத்கர் · ராம்மோகன் ராய் · ரவீந்திரநாத் தாகூர் · பாலகங்காதர திலகர் · ஈ.வெ. ராமசாமி · முகம்மது அலி ஜின்னா · சி.ராஜகோபாலச்சாரி · ஜெயப்பிரகாஷ் நாராயண் · கோபால கிருஷ்ண கோகலே · சையது அகமது கான் · ஜோதிராவ் ஃபுலே · தாராபாய் ஷிண்டே · கமலாதேவி சட்டோபாத்யாய் · எம்.எஸ்.கோல்வல்கர் · ராம் மனோகர் லோஹியா · வெரியர் எல்வின் · ஹமீத் தல்வாய் நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகள் என்று இவர்களைக் குறிப்பிடமுடியும். இந்தியா என்றொரு தேசம் உருவானதற்கும் ஆயிரம் குறைபாடுகள் இருந்தாலும் இந்த நிமிடம் வரை உயிர்ப் புடன் நீடிப்பதற்கும் காரணம் இவர்கள்தாம். பொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம், தேச ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் உள்ளிட்ட உயர்ந்த நோக்கங்களை முன்வைத்து இவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் நம் வாழ்வை அடியோடி மாற்றியமைத்தன. நவீன இந்தியாவை வடிவமைக்கவும் வலிமைப்படுத்தவும் உதவிய இந்த அசாதாரணமான ஆளுமைகளின் பங்களிப்பை அவர்களுடைய படைப்புகள்மூலம் அறிமுகப்படுத்துகிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியரான ராமச்சந்திர குஹா.

You may also like

Recently viewed