Description
இந்த நூல் சிந்தனைச் செல்வர் பழ.கருப்பையா யார் என்பதை முழுதும் எடுத்துக்காட்டும் ஆய்வுக் களஞ்சியம்!- தமிழண்ணல்வேதவியாசனே பிறந்து வந்து படித்துப் பார்த்தால், ‘அட, இப்படி யெல்லாம்கூட நான் படைத்த கதாபாத்திரங்களுக்கு வியாக்கியானம் தர முடியுமா?’ என ரசித்துப் பாராட்டுவார். இது முகஸ்துதியல்ல!- ‘தினமணி ஆசிரியர்’ கே.வைத்தியநாதன்கற்றறிந்தோர் இந்நூலை மிகவும் ரசிப்பர்; போற்றிப் பாதுகாப்பர்!- பத்ரி சேஷாத்ரிபழ.கருப்பையா சில சினிமா படங்களைத் தயாரித்திருக்கிறார்; நடிக்கவும் செய்திருக்கிறார்! பழுத்த தேசியவாதி; ஆனால் தமிழுணர்வு மிகுந்தவர்; இலங்கைப் பிரச்சனையில் அவருக்கும் எனக்கும் கருத்து மாறுபாடு வரும்!நல்ல பேச்சாளர்; அதே மாதிரி எழுதவும் செய்வார்! ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. க்களில் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார்! அவரிடம் இருக்கும் நேர்மை நெருப்பைப் போன்ற நேர்மை! ‘துக்ளக்’ சோ (குமுதம் 12.03.2014)