Description
இதுவரை இந்தியாவை ஆண்ட மன்னர்களின் வரிசையில் கிருஷ்ணதேவராயருக்குச் சரித்திரத்தில் அளிக்கப்பட்டுள்ள இடம் சிறப்பானது மட்டுமல்ல, தனித்துவமானதும்கூட. இந்தியாவின் முதன்மையான இந்து மன்னர்களில் ஒருவர் என்றும் தென் இந்தியாவின் மிகப் பெரிய கொடை என்றும் அரசர்களுக்கெல்லாம் அரசர் என்றும் வரலாற்றாசிரியர்கள் கிருஷ்ணதேவராயரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.கிருஷ்ணதேவராயர் முதல்முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது அசாத்தியமான சவால்கள் பல அடுத்தடுத்து எழுந்து வந்தன. விஜயநகரத்தின்மீது தொடர்ந்து படையெடுத்துக்கொண்டிருந்த தக்காணத்து சுல்தான்களைத் தனது வீரம், விவேகம் இரண்டையும் பிரயோகித்து வென்றெடுத்த கிருஷ்ணதேவராயர் படிப்படியாக ஒரு சக்தி வாய்ந்த ஹிந்து ராஜ்ஜியத்தைக் கட்டமைக்கத் தொடங்கினார். ஓர் அரசன் தன்னுடைய படை வலிமையை மட்டுமே நம்பி ஆட்சி நடத்த முடியாது என்பதை உணர்ந்திருந்த கிருஷ்ணதேவராயர் மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை அறிமுகப்படுத்தி கன்னட, தெலுங்கு, தமிழக மும்மாநில மக்களின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றுக்கொண்டார்.கிருஷ்ணதேவராயரின் வாழ்க்கை, ஆட்சி முறை, போர்கள், அவர் வாழ்ந்த காலகட்டத்தின் சமுதாய அமைப்பு ஆகிய அனைத்தையும் இந்தப் புத்தகம் எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் அறிமுகப்படுத்துகிறது.