ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள்

Save 13%

Author: வேணு சீனிவாசன்

Pages: 400

Year: 2014

Price:
Sale priceRs. 350.00 Regular priceRs. 400.00

Description

நமது பாரத தேசத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி தரிசனம் தரும் கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளுள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் ‘திவ்ய தேசங்கள்’ எனவும், திவ்ய தேசங்களைப்பற்றிய பாடல்கள் ‘மங்களாசாசனம்’ எனவும் அழைக்கப்படுகின்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108. இவற்றில் 106 இந்தப் பூவுலகில் உள்ளன. இவற்றில் 82 திவ்யதேசங்கள் தமிழ்நாட்டிலேயே இருக்கின்றன என்பது நமக்கெல்லாம் பெருமை தரும் தகவல்.இந்தத் திவ்ய தேசங்கள் எல்லாமே தெய்வீகச் சிறப்பு வாய்ந்தவை; சரித்திரப் புகழ் பெற்றவை. சில கோயில்களின் வரலாற்று மதிப்பை அந்தக் கால சரித்திர நூல்கள் மட்டும் இல்லாமல் சமகாலத்திய இலக்கியங்களும் போற்றுவதைப் பார்க்கலாம். இந்த ஒவ்வொரு திருத்தலத்திலும் பகவான் மகாவிஷ்ணு நிகழ்த்திய லீலைகளும் திருவிளையாடல்களும் கேட்கக் கேட்கத் திகட்டாதவை. மெய்சிலிர்க்க வைப்பவை. இந்த நூலில் 108 திவ்ய தேசங்களின் தெய்வீகச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் சொல்லப்படுவதுடன், ஒவ்வொரு திவ்யதேசம் அமைந்துள்ள பகுதி, செல்லும் வழிகள், தங்கும் வசதிகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் புராணத் தகவல்கள், சிறப்புச் செய்திகள் ஆகியவற்றோடு, அந்தத் தலத்துப் பெருமாளைத் தரிசித்தால் பக்தர்கள் பெறும் பயனும் கொடுக்கப்பட்டுள்ளது.108 திவ்யதேச யாத்திரைக்குச் செல்லும்முன் உங்கள் கைகளில் இருக்கவேண்டிய முக்கியமான புத்தகம் இது.

You may also like

Recently viewed