ஒரு கூர்வாளின் நிழலில்


Author: தமிழினி

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 220.00

Description

இந்த நூலில் தமிழினியின் சிறுவயது பருவம், மாணவப்பருவத்தில் விடுதலைக்கு ஆதரவான செயல்பாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்தல், அங்கு இயக்கப்பணிகளில் ஈடுபடுதல், ஆயுதப் பயிற்சி பெறுதல் சமாதானக் கால செயல்பாடுகள், இறுதிப்போர் காலக்கட்டம், சரண்டைதல், சிறை செல்லல், புணர்வாழ்வு முகாம், விடுதலை ஆகிய காலக்கட்டங்களைப் பற்றிய நினைவோடையாக இந்த நூல் உள்ளது. ஒரு கூர்வாளின் நிழிலில் என்பது ஒரு தன் வரலாற்று நூலாகும். இதை எழுதியவர் சிவகாமி ஜெயக்குமரன் என்னும் தமிழினி ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிரணித் தலைவியாக இருந்தவர். இவர் புற்று நோயினால் இறந்த பிறகு இவரால் எழுதப்பட்ட நூல் என்று வெளியிடப்பட்டது. இந்த நூல் சிங்கள மொழியில் மொழிபெயர்கப்பட்டு வெளிவந்துள்ளது. இவர் போராளியாக இருந்த காலத்திலேயே எழுத்திலும் வாசிப்பிலும் ஈடுபாட்டுடன் பல கட்டுரைகளையும், கதைகளையும், கவிதைகளையும் எழுதியுள்ளார். இவரது எழுத்துக்கள் விடுதலைப் புலிகளின் ஊடகங்களான சுதந்திரப் பறவைகள், வெளிச்சம், நாற்று, ஈழநாதம் போன்றவற்றில் வெளிவந்துள்ளன. இவர் சிறையில் இருந்த காலத்திலும் சிறை மீண்ட பிறகும் இவை தனி நூலாக வெளிவந்துள்ளன.

You may also like

Recently viewed