Description
சார்வாகன், அவர் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வேறு எந்த எழுத்தாளரோடும் ஒப்பிட முடியாத தனி வகையைச் சேர்ந்த படைப்பாளியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். அவருடைய முன்னோடி என்று காட்டக்கூடிய எழுத்தாளர் எவரும் அவருக்கு முந்தைய தலைமுறையில் இல்லை. ஆனால் அவரது சமகாலத்தின் எல்லா உன்னதமான எழுத்தாளரிடமும் காணப்பட்ட ஒற்றுமைகள் சார்வாகனிடமும் காணக்கிடைக்கின்றன. முதலில் சொல்லப்பட வேண்டிய குணாம்சம் கதைகளில் வெளிப்படும் தன்முனைப்பற்ற தன்மை. அடுத்ததாக மொழித்தேர்ச்சியின் விளைவாக அமைந்த பிழையற்ற செறிவான உரைநடை; பொருத்தமான சொற்தேர்வு. மிகச் செழுமையான தமிழ் சார்வாகனுடையது.