Description
கவிதைக்குக் கண்ணுக்குப் புலனாகாத உருவமிருக்கிறது, அதன் சொற்களுக்குக் கட்செவியால் மாத்திரமே கேட்கக்கூடிய ஓசையுண்டு என்பதை நம்புகிறவர் என்றால், குணாவின் இந்தக் கவிதைகளினூடாக நீங்கள் ஒருவித உருவ ஒழுங்கையும் ஓசையமைதியையும் உணர முடியும். முதிர்ச்சியும் பக்குவமும் கொண்ட உலகியல் நோக்கும், அது கூட்டியிருக்கும் மென்மையானதொரு அங்கதமும், சுழித்தெழும் உணர்ச்சிகளைக் கையாளும்போதுகூட பேணுகிற சமநிலையும், வெகு நுட்பமான தருணங்களையும் சலனங்களையும் அதன் சாயைகளுடன் ஒற்றி எடுத்துவிடக்கூடிய நேர்த்தியான மொழியும், இந்தக் கவிதைகளுக்கு ஆர்ப்பாட்டம் எதுவுமில்லாத அசலானதொரு ஆழத்தை வழங்குகின்றன. கவிதையை அதன் பிரதிபெயர்க்கவியலாத தீவிரத்தன்மைக்காகவே அணுகுகிறவர் நீங்கள் என்றால் இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் உங்களுக்கு அவ்வாறான நிறைவைத் தருவதாக அமைந்திருப்பதைக் காணலாம். -க. மோகனரங்கன்