Description
புதுச்சேரி நகரத்தில் அனைத்துத் தெருக்களையும், அவற்றின் பின்னணியில் வரலாற்றையும் விரிவாக விளக்கிச் சொல்கிறது.
வரலாற்றின் மீதான ஆர்வமும், அயராத உழைப்பும், நுாலின் ஒவ்வொரு பக்கத்திலும் மிளிர்கிறது. புத்தகம் சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளது. தெளிவான அச்சு வாசிக்க துாண்டுகிறது. உரிய பகுதிகளில் வரைபடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கனம் மிக்க வரலாற்றை, எளிமையான மொழிநடையால் உள்ளத்தில் பதிய வைக்க முயற்சிக்கிறார். பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வரலாற்று தகவல் பெட்டகம்.