Description
எதுவும் நிரந்தரமாக நம்முடன் தங்கியிருக்க முடியாத ஓர் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று நாம் உருவாக்கி வைத்துள்ள, அதிதீவிர உற்பத்தித்திறன் கோலோச்சுகின்ற சுற்றுச்சூழல் காரணமாக, நாமும், நம்முடைய வாழ்வில் இடம் பெற்றுள்ளவர்களும், ஒரு வேலை தேடியோ அல்லது பிற காரணங்களுக்காகவோ இடம் பெயர வேண்டியிருக்கிறது. அதனால், நாம் தனியாக விடப்படுகிறோம். ஆனால், இது உங்களுக்குத் தனிமையுணர்வை உருவாக்க வேண்டியதில்லை. நீங்கள் உங்களுடைய சுயத்துடன் இருக்கிறீர்கள், அவ்வளவுதான்

