Description
ஜவஹர்லால் நேருவின் ஆரம்ப கால வாழ்க்கையிலிருந்து
திருப்புமுனையாக அமைந்த அவரது அரசியல் வெற்றிகள்
வரை தனிச்சிறப்புமிக்க படங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இதில் மிகக்கவனமாக எழுதப்பட்டிருக்கும் விவரக்குறிப்புகள் ஆகியவற்றின் ஊடாக, வரலாற்றின் அரிய நிகழ்வுகளுக்குள் வாசகர்களை இந்தப் புத்தகம்
அழகுற அழைத்துச் செல்கிறது. நேரு மறைந்தபோது
நிலவிய தேசத்தின் உணர்வுகளை இதுவரை எந்த ஒரு
புத்தகமும் செய்திராத அளவிற்குச் சிறப்பாக இந்தப்
புத்தகம் சிறைபிடித்திருக்கிறது.
பிரணாப் முகர்ஜி
பண்டித நேரு மறைந்த அரை நூற்றாண்டு காலத்திற்குப்
பிறகு, அவரது பண்முக ஆளுமைப் பற்றியும்,
நவீன இந்தியாவுக்கு வடிவம் கொடுப்பதற்கு அவர்
செய்திருக்கும் பங்களிப்பு பற்றியும் இளையதலைமுறை
யினருக்கு நினைவுப்படுத்த வேண்டியிருக்கிறது.
கோபண்ணா இதனைச் சிறப்பான முறையில் செய்திருக்
கிறார். அவரது ஊக்கம் தளராத, சுவைமிகுந்த இந்த
முயற்சி வெகுவாகப் பாராட்டத்தக்கது.
ஹமீத் அன்சாரி