Description
தமிழ் உரைநடைக் கடிதங்களுக்கு வித்திட்டவர்
அருட்பிரகாச வள்ளல் பெருமான். அவர்
1860-களிலேயே தனது சீடர்களுக்கும் புரவலர்களுக்கும்
எழுதத் தொடங்கினார். அதன் பின்னர் பண்டிதர்
அயோத்திதாசர்தான் அதிக அளவு கடிதப்
போக்குவரத்தைக் கொண்டிருந்திருக்கின்றார் என்பது
நன்கு புலப்படுகின்றது. கடிதப் போக்குவரத்துகள்
எண்ணற்ற செய்திகளையும் கருத்துக்களையும்
பரிமாறுகின்றன.
பிக்கு போதிபால
வெறுமனே தகவல் என்ற அடிப் படையில்
மட்டுமின்றி தத்துவங்கள், இலக்கியங்கள், சமய
உண்மைகள், அரசியல் பிரச்சினைகள் என்று
பல்வேறு பொருண்மைகள் இக்கடிதங்களில் அலசி
ஆராயப்பட்டுள்ளன. தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டிருந்த
அறிவு வேட்கைகளின் முக்கிய பதிவாக இக்கடிதங்கள்
உள்ளன.
க.ஜெயபாலன்