Description
நான் சந்தித்த வி.ஐ.பி.களின் சாதனை அனுபவங்களை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, 'வி.ஐ.பி.களின் பர்சனல் பக்கங்கள் என்ற தொடர் பேட்டிகளை 'ராணி' வார இதழில் எழுதி வந்தேன். கலை, இலக்கியம், அரசியல் என பல துறைகளிலும் தனி முத்திரை பதித்து வெற்றிகரமான மனிதர்களாக, சாதனை படைத்து வரும் வி.ஐ.பி.களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து வெளியிட்டு வந்தேன். தடைகள், அவமானங்கள், வலிகள், துரோகங்கள் என எல்லாவற்றையும் கடந்து, விடாமுயற்சியுடன் உழைத்து இவர்கள் இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். இந்த உன்னத மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்கள், வாசகர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும் என்பது நிச்சயம். இதில் இடம்பெற்றிருக்கும் 24 வி.ஐ.பி.களுமே 24 முத்துக்கள். இந்த முத்துக்களுக்குள் மூழ்கித் திளைக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
அன்புடன்.
ஜி.மீனாட்சி