Description
வண்ணநிலவனின் இந்த நாவல் தன்வரலாற்றுத் தன்மை கொண்டது. கடந்துபோன காலத்தின் நினைவுகூரலாகவும் கற்பனைக்கு எட்டாத வகையில் மாறிவிட்ட நிகழ்காலம் குறித்த சிந்தனைச் சரமாகவும் இரட்டைப் பாதைகளில் பயணிக்கிறது நாவல். கதைசொல்லி தன்னுடைய சிந்தனைகளை முன்வைத்தபடி செல்ல, கதைசொல்லியின் மனைவி கடந்தகாலம் குறித்த தன் நினைவுகளை அசைபோடுகிறார். நேற்றைய நினைவுகள், இன்றைய மாற்றங்கள் குறித்த நினைவேக்கங்களும் சிந்தனைகளும் என ஆண், பெண் ஆகியோரது பார்வைகளில் விரியும் நாவல் இது. காலமெனும் நெடுஞ்சாலையில் முன்னும் பின்னுமாக நிகழும் மன யாத்திரையின் பதிவுகள் நாவலின் கதையாடலாக உருமாறுகின்றன