இயற்கை பண்பாடு ஏற்றத்தாழ்வுகள்

Save 5%

Author: தாமஸ் பிக்கெட்டி, தமிழில்-எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி

Pages: 72

Year: 2025

Price:
Sale priceRs. 95.00 Regular priceRs. 100.00

Description

பிரெஞ்சுப் பொருளாதாரச் சிந்தனை யாளர் தொமா பிக்கெத்தியின் கருத்துகள் இன்று பல்வேறு தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுவருகின்றன. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஆராய்ந்து அவற்றைச் சமன் படுத்தும் வழிவகைகள்பற்றி இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நூல் ஒரு புதிய அணுகுமுறையை முன்வைக்கிறது. இதில் ஆசிரியரின் தனித்துவமும் பன்முகமுமான சிந்தனை வெளிப்படுகிறது. பொருளாதாரக் கொள்கைகளை மட்டுமே தொமா பிக்கெத்தி தம் கருத்துகளுக்கு அடித்தளமாக அமைத்துக் கொள்ளவில்லை; சமூகவியல், வரலாறு ஆகியவற்றையும் துணைக்கு இழுத்துக்கொள்கிறார். இவரது வரலாற்றுப் பார்வை பின்னோக்கி இரண்டு மூன்று நூற்றாண்டுகள்வரை நீள்கின்றது. காலனி ஆதிக்கம்பற்றிப் பேசும்போது இவரிடம் ஒரு சமூகவியல் பார்வையும் இருப்பதைக் காணலாம். தொமா பிக்கெத்தி 21ஆம் நூற்றாண்டில் எண்ணியல் வழி கிடைக்கும் தரவுகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கிறார். பொருளாதாரத் துறையில் இனிவரும் ஆய்வுகளுக்கு உதவும் வகையில் வழிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதும் இக்கட்டுரையின் கூடுதல் சிறப்பாகும்.

You may also like

Recently viewed