Description
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் சிலரது தனிப்பட்ட வாழ்க்கையையும் இலக்கியப் பங்களிப்பையும் விரிவாக அறிமுகப்படுத்தும் நூல் இது.
படைப்புகள் தரும் வாழ்க்கைப் பார்வைக்கும் படைப்பாளிகளின் வாழ்க்கையின் மூலம் ஒருவர் பெறக்கூடிய வாழ்க்கைப் பார்வைக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருக்கக்கூடும். இந்த நூலில் இடம்பெறும் இலக்கியச் சாதனையாளர்களின் வாழ்வும் பயணமும் வாசகர்களின் அறிதலில் புதிதாகப் பல வாசல்களைத் திறக்கக்கூடியவை.
ஈழத்தில் பிறந்து, தற்போது கனடாவில் வசித்துவரும் இளங்கோ, தனது விரிவான வாசிப்பிலிருந்து கிடைத்த அரிய தகவல்களையும் ஆழமான பார்வைகளையும் இந்த நூலில் முன்வைக்கிறார்.
எர்னெஸ்ட் ஹெமிங்வே, மிலன் குந்தேரா, ஹருகி முரகாமி, கே.ஆர். மீரா உள்ளிட்ட பத்து எழுத்தாளர்களை நன்கு அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த நூல் தருகிறது.