புதைமணல்

Save 5%

Author: அரவிந்தன்

Pages: 176

Year: 2025

Price:
Sale priceRs. 210.00 Regular priceRs. 220.00

Description

அரவிந்தனின் சிறுகதைகள் அன்றாட வாழ்க்கையின் சட்டகத்திற்குள் இயங்குபவை; நேரடியானவை. அந்தச் சட்டகத்திற்குள் அதிகம் கவனம் கொள்ளாத தருணங்களை, நிகழ்வு களைப் பேசுகின்றன. இருவேறு மனநிலைகளின் கதைகள் என்று இவர் கதைகளைச் சொல்லலாம். அன்றாட வாழ்க்கை நகரும் படிக்கட்டுகள் போன்றது. அதன் சீரான இயக்கம் தடைபடாதவரை யாவும் எளிதே. திடீரெனப் படிக்கட்டுகள் பாதியில் நின்றுவிடும்போது இரும்புப் படிகளில் ஏறிக் கடப்பது சிரமமானது. அதுபோன்ற தருணங்களையே அரவிந்தன் கதையாக்குகிறார். அரவிந்தனின் கதாபாத்திரங்கள் தங்கள் சூழ்நிலைகளுடனும் உணர்ச்சிகளுடனும் போராடுகிறார்கள். அவர்கள் வசிக்கும் நகரம் திடீரென நிறையக் கைகள் கொண்ட ஆக்டோபஸ் போலாகி அவர்களைத் திணறடிக்கிறது. அவரது ஒவ்வொரு சிறுகதையின் முடிவும் இன்னொரு புதிய கதைக்கான துவக்கம்போலவே இருக்கிறது. இந்தத் தொகுப்பில் பத்து வித்தியாசமான கதைகள் உள்ளன. அவை தனித்துவமான அனுபவத்தை உருவாக்குகின்றன.

You may also like

Recently viewed