கவிதை மாமருந்து

Save 5%

Author: பெருமாள்முருகன்

Pages: 200

Year:

Price:
Sale priceRs. 238.00 Regular priceRs. 250.00

Description

பழந்தமிழ் இலக்கியத்தைக் கற்றுக்கொள்ள உதவும் நூல்கள் பல உள்ளன. ஆனால் நவீன கவிதையை அணுக வழிகாட்டும் நூல்கள் அதிகம் இல்லை. நவீன படைப்பாளி, கவிஞர் என்பதோடு ஆசிரியராகவும் பணியாற்றிய பெருமாள்முருகனுக்கு மாணவர்களிடம் நவீன கவிதைகளை எடுத்து விளக்குவதற்கான வாய்ப்புகள் இயல்பாக அமைந்தன. அந்த அனுபவம் தந்த உற்சாகமே இத்தகைய கட்டுரைகளை எழுத அவரைத் தூண்டியது. ஒரு கவிஞரின் ஒரு கவிதையை எடுத்து விளக்குவதே இந்தக் கட்டுரைகளின் பொதுவியல்பு. கவிஞரைப் பற்றிய தகவல்கள், அவர் கவியுலகம் குறித்த பார்வைகள் சுருக்கமாக இடம் பெற்றுள்ளன. கவிதையை விளக்கத் தன் சொந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள பெருமாள்முருகன், இலக்கிய இலக்கண மரபு சார்ந்த கோட்பாடுகளையும் பயன்படுத்தியிருக்கிறார். கவிதையின் சுவை உணர்ந்து நவீன கவிதைக்குள் செல்வதற்கு உதவும் நயநூல் என இதைச் சொல்லலாம்.

You may also like

Recently viewed