Description
பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆற்காட்டின் பிரதான மாகாணங்களை நவாப்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். சிவகங்கை என்னும் சிறிய நாடு அதன் மன்னர் முத்துவடுகநாத தேவரின் மரணத்திற்குப் பிறகு மிகுந்த இக்கட்டிற்குள்ளாகிறது. அவரது இணையரான அரசி வேலு நாச்சியார் தன் தளபதிகளுடனும் மக்களுடனும் அரண்மனையை விட்டு வெளியேற வேண்டியதாகிறது. தன்னைக் கொல்வதற்காக ஆற்காட்டிலிருந்து அனுப்பப்பட்ட ஒற்றர்கள், கொலையாளிகள் உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளைத் தாண்டி வானாந்தரத்திலிருந்து விரைவிலேயே மீளும் வேலு நாச்சியார் வீறுகொண்டு எழுந்தார். சிவகங்கையின் படையில் பெண்களையும் சேர்த்து அவர்களுக்குக் கொரில்லாப் போர்முறையிலும் தற்காப்புக் கலைகளிலும் பயிற்சியளித்தார். ராணி வேலு நாச்சியாரின் வீரமிகு வாழ்வைச் சொல்லும் இந்த வரலாற்றுப் புனைவு அந்தக் காலத்து வரலாற்றை நம் கண்முன் நிறுத்துகிறது. சுபேந்திரா எழுதியுள்ள வேலு நாச்சியாரின் வீரமிகு வாழ்வை விறுவிறுப்பான நடையில் தமிழில் தந்திருக்கிறார் இல.சுபத்ரா.