Description
உ.வே.சாமிநாதையரைப் பற்றித் தொடர்ந்து எழுதிவரும் பெருமாள் முருகன் அவரை இருவிதங்களில் அணுகுகிறார். ஒன்று அவரது பதிப்பு நுட்பங்களையும் பதிப்பு வரலாற்றையும் ஆய்வது. அவர் எழுதிய உரைநடை நூல்களிலிருந்து பெறுபவற்றைச் சமகாலம் சார்ந்து விளக்குவது இரண்டாவது. இந்த இரண்டு அணுகுமுறை களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். முதல் அணுகுமுறையில் அமைந்த கட்டுரைகள் உ.வே.சா.வின் பதிப்புச் செயல்பாடுகள்பற்றி ஆழமான பார்வைகளைக் கொண்டவை. மற்ற கட்டுரைகள் உ.வே.சா.வின் கருத்துக்கள், அணுகுமுறைகள், செயல்முறைகள் ஆகியவற்றின் வெளிச்சத்தில் சமகால அரசியலையும் சமூகப் பிரச்சினைகளையும் அலசுகின்றன. வெளிவந்தபோது பலவித எதிர்வினைகளைப் பெற்ற கட்டுரைகள் இவை. உ.வே.சா.வை அவருடைய பணிகள் சார்ந்தும் அவருடைய வாழ்வையும் கருத்துக்களையும் சமகாலப் பார்வை சார்ந்தும் நெருக்கமாக அணுகிப் பார்க்கும் இந்தக் கட்டுரைகள் உ.வே.சாவைப் பற்றிய புரிதலை ஆழப்படுத்தக்கூடியவை.