இங்கிவரை நாம் பெறவே

Save 5%

Author: ஜெ. சுடர்விழி

Pages: 176

Year: 2025

Price:
Sale priceRs. 210.00 Regular priceRs. 220.00

Description

ஆளுமைகளின் வரலாறு என்பது சமூகத்தின் வரலாறாகவும் ஒரு காலகட்டத்தின் வரலாறாகவும் தொழிற்படுகிறது. “ஆளுமைகளினூடாகச் சமூக அசைவியக்கத்தை இனங்காண்பது சுவையான முறையியலாகும்” என்று வரலாற்றாய்வாளர் ஆ.இரா. வேங்கடா சலபதி குறிப்பிடுகிறார். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அதைத்தான் செய்கின்றன. சென்னைக் கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் ஜெ. சுடர்விழி ஆளுமைகள், மரபிலக்கியம், நவீன இலக்கிய விமர்சனங்கள் சார்ந்து கட்டுரைகளை எழுதிவருகிறார். தமிழின் முக்கியமான ஆளுமைகள் சிலரைப் பற்றி அவர் எழுதிய தனித்துவமான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. வி.மு. சுப்பிரமணியம், பரிதிமாற்கலைஞர், கு. அழகிரிசாமி, அம்பை, ஆ.இரா. வேங்கடாசலபதி, பாமா, இமையம் முதலான பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய விரிவான அலசல்கள் இதில் உள்ளன. ஆளுமைகளின் பின்புலம், வாழ்க்கை, செயல்பாடுகள் ஆகியவற்றைத் தொகுத்துத் தருவதோடு, அவர்களுடைய பங்களிப்புகள் குறித்த தனித்துவமான பார்வையும் இதில் வெளிப்படுவதைக் காணலாம்.

You may also like

Recently viewed