Description
சிறந்த இலக்கியங்களை வாசித்த அனுபவமும் தேர்ந்த ரசனையும் கொண்டவர்களாலேயே இலக்கியப் பிரதிகளின் உள்ளே உறையும் அர்த்தங்களையும் நுட்பங்களையும் கண்டு சொல்ல முடியும். பேராசிரியரும் எழுத்தாளருமான கல்யாணராமன் அத்தகைய விமர்சகர்களில் ஒருவர். பண்டைய இலக்கியங்கள் முதல் நவீன படைப்புகள்வரை அவர் அலசும் ஒவ்வொரு பிரதியும் புதுப்புது முகங்களைக் காட்டுகின்றன. வாசிப்பின் புதிய கதவுகளைத் திறக்கின்றன.
இக்கட்டுரைகளின் முக்கியமான பலம் இவற்றில் ஊடாடும் கற்றல், கற்பித்தல் பண்புகள். ஒவ்வொரு கட்டுரையும் ஏதோ ஒருவகையில் அறிதலைத் தருவதாக அமைந்துள்ளது.
கல்யாணராமனின் தனித்துவமான அலசல்களில் வெளிப்படும் தரிசனங்கள் இந்நூலில் ‘அமுதின் அமு’தாகத் திரண்டுள்ளன.