Description
தமிழகக் கிராமங்களில் வழக்காற்றி லுள்ள ராமாயணக் கதைகளும் நாட்டார் கலைகளில் நிகழ்த்தப்படும் ராமாயணக் கதைகளும் முழுவதும் தொகுக்கப்படவில்லை. இந்தப் பணியை அ.கா. பெருமாள் தொடர்ந்து செய்துவருகிறார். இவரது ‘ராமன் எத்தனை ராமனடி’ என்ற நூலை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சி இந்த நூல்.
கேரளத் தோல்பாவைக் கூத்தில் நிகழ்த்தப்படும் ராமாயணம் இந்நூலில் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நூலின் இரண்டாவது பகுதியில் ‘தெய்வங்கள்’ என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் வழக்காறுகளுடன் தொடர்புடையவை. நாட்டார் மரபில் பெருநெறி வழிபாட்டின் தாக்கம் முற்காலத்திலேயே வந்துவிட்ட செய்தி விரிவாக விளக்கப்படுகிறது.