Description
அலியும் நினோவும்’ நாவல், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ரஷ்யா, ஈரான், அஜர்பைஜான், ஜியார்ஜியா பகுதிகளின் கொந்தளிப்பான பின்னணியில் அமைந்த அழுத்தமான அழகான காதல் கதை. இஸ்லாமிய அஜர்பைஜானி இளைஞருக்கும் கிறிஸ்துவ ஜார்ஜிய இளவரசிக்கும் இடையிலான ஆழமான, சிக்கலான காதலைப் பேசும் இந்தக் கதை வரலாறு, அடையாளம், பண்பாடு என்கிற அடுக்குகளில் பயணித்துக் காலத்தை வெல்லும் படைப்பாக மாறுகிறது.
முதலாம் உலகப் போர் காலத்தில் சோவியத் நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அஜர்பைஜான் நாட்டின் வரலாற்றையும் இக்காதல் கதையுடன் இணைத்திருக்கிறார் நாவலாசிரியர்.
இதுவரை 30 மொழிகளில் வெளிவந்து, 100 பதிப்புகளுக்கு மேல் கண்ட நூல் இது. திரைப்படமாகவும் வந்திருக்கிறது. பயணி தரனின் உயிரோட்டமுள்ள மொழியாக்கம் உலகப்
புகழ்பெற்ற இந்த நாவலைத் தமிழ் வாசகருக்கு நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது