மக்களின் தோழர் கே.கே.ஷைலஜா

Save 5%

Author: கே.கே.ஷைலஜா, தமிழில்-தி.அ.ஸ்ரீனிவாஸன்

Pages: 320

Year: 2025

Price:
Sale priceRs. 370.00 Regular priceRs. 390.00

Description

கேரளத்து மலபார் பிரதேசத்தின் வனாந்திரக் குக்கிராமத்தில் எளிய குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஓர் ஆசிரியை மாநிலத்தின் சுகாதார அமைச்சராகிப் பல சவால்களை எதிர்கொண்டு சாதித்துக்காட்டிய கதை இது. கே.கே. ஷைலஜா, கேரளச் சுகாதாரத் துறையைப் புத்துருக்கிச் சீரமைத்துத் தரமான மருத்துவச் சேவையை அம்மாநிலத்தின் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டுசேர்த்தவர். இந்தப் புத்தகம் அவரது தன்வரலாற்றையும் அரசியல் பயணத்தையும் மட்டும் பேசவில்லை; மலபார் பிரதேசத்தின் சமூக அமைப்பு, பண்பாடு, கேரள அரசியல் வரலாறு ஆகியவைபற்றியும் பேசுகிறது.‌ இது ஒரு சாதாரண அரசியல்வாதியின் சாதனைகளைப் பேசும் சம்பவங்களின் தொகுப்பல்ல; சமூக மாற்றம் என்ற‌ தனது பெருங்கனவை மக்களின் பிரதிநிதியாகத் தனக்குக் கிடைத்த பதவியின் மூலம் நனவாக்க முயன்ற ஓர் இலட்சியவாதியின் நினைவுக் குறிப்புகள். அசாதாரணமான இந்த ஆளுமையின் சித்திரத்தையும் வாழ்க்கைச் சம்பவங்களையும் உணர்வுபூர்வமாக, இயல்பான நடையில் தி.அ. ஸ்ரீனிவாஸன் தமிழாக்கித் தந்திருக்கிறார்.

You may also like

Recently viewed