Description
உலகின் மிக முக்கிய புண்ணியத் தலம் எது என்றால் காசியை தான் அனைவரும் சுட்டி காட்டுவார்கள். இந்த காசி தலத்தின் அருமை பெருமைகளை இந்த நூல் பேசுகிறது. காசியில் ஓடும் கங்கை நதி புராண காலத்தில் உற்பத்தி ஆனது முதல் இன்றைய நிலைமை வரை உள்ள காட்சிகள் இந்த புத்தகத்தை படிக்கும் போது நம் கண் முன் விரிகின்றன. இதுவரை காசிக்கு செல்லாதவர்கள் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த நூல் தூண்டுகிறது. ஏற்கனவே போய் வந்தவர்கள் பழைய நினைவுகளை அசை போட இது உறுதுணையாக இருக்கிறது. உங்கள் கையில் இந்த நூல் இருந்தால், நிச்சயமாக நீங்கள் புண்ணியம் செய்தவராகத் தான் இருப்பீர்கள்.

