ஜெயகாந்தனின் சிந்தையை கவர்ந்த சிறுகதைகள்

Save 18%

Author: கோ.எழில்முத்து

Pages: 116

Year: 2024

Price:
Sale priceRs. 140.00 Regular priceRs. 170.00

Description

நான் ஒரு வாசகன் அல்ல. எவ்வளவு நல்ல புத்தகமானாலும் என்னால் முழுக்கப் படிக்க முடியாது அது நான் எழுதிய புத்தகமாய் இருந்தால் தவிர. எந்தப் புத்தகத்தையும் என் சிந்தையைக் கவர்ந்து விடுவதற்கு நான் அனுமதிப்பதில்லை, அது நான் எழுதிய புத்தகமாக இருந் தாலும் கூட. அதாவது இந்தச் சிந்தை 'கவர்ந்த' என்ற வார்த்தை Influence' என்ற ஆங்கில வார்த்தையின் மொழிபெயர்ப்பு என்று எனக்கு அறிவிக்கப்பட்டதை வைத்துக் கொண்டு சொல்லுகிறேன். 1 have never allowed any book to influence me and I will never..." நானும் எழுதுகிறவன் என்பதால் எனக்கு மட்டுமே நான் வகுத்துக் கொண்ட ஒரு நெறி இது. என்னிடம் நூல் நிலையம் கிடையாது. நான் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவதுமில்லை, இரவல் வாங்கிப் படிப்பதும் இல்லை. இவ்வளவையும் மீறிப் புத்தகங்கள் என்னை வந்து சந்திக்கின்றன. அவற்றை நான் படிக்கிறேன். சிலவற்றை முக்கால்வாசி கூடப் படிப் பேன்.

You may also like

Recently viewed