Description
‘என்னுடைய சக்தி, மட்டையால் நான் உருவாக்கும் வேகம், மட்டைக்கு நான் கொடுக்கும் வீச்சு ஆகியவையே...’மகேந்திர சிங் தோனி, எந்த அளவுக்கு அமைதியாகவும் நிதானம் இழக்காமலும் ஆடுகளத்தில் இருக்கிறாரோ, அந்த அளவுக்கு வெளியே, அடக்கமானவராக உள்ளார். ஆனால் 5 ஏப்ரல் 2005 அன்று விசாகப்பட்டிணத்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் முதல் ரெகுலர் விக்கெட்கீப்பராக அவர் அடித்த சதத்தின்மூலம் உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தபோது, மனத்தில் தோன்றிய சில வார்த்தைகள், ‘முரட்டு சக்தி’, ’கொலை வெறி’, ‘பேயாட்டம்’ போன்றவை.அன்றைய தினத்தின் அற்புதமான ஆட்டத்தோடு, தலைக்கவசத்துக்குக் கீழே தெரியவந்த நீண்ட தலைமுடி, சூரிய வெளிச்சத்தில் மின்னிய சிவப்புச் சாயம் ஆகியவை, கண்காணாத சிறிய நகரத்திலிருந்து வந்த மகி தோனியை, ராக் ஸ்டாருக்கு உரிய பிரபலத்தன்மை கொண்ட ஒரு விளையாட்டு நட்சத்திரமாக மாற்றியது.இத்தனைக்கும், தோனி ஒரு குழந்தை மேதை கிடையாது. ஒரு ராத்திரியில் வெற்றி பெற்றவர் கிடையாது. முதல் ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் விளையாடும்போது அவருக்கு வயது 23. இந்திய வீரர்களைப் பொருத்தமட்டில் முதிர்ச்சி அடைந்தவர். அதற்கு முன்னதாக ஐந்து ஆண்டுகள் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடியிருந்தார்.இவ்வளவு பெரிய நட்சத்திரமாக இவர் ஆனது எப்படி, ஆட்டத்துக்கு ஆட்டம் இவர் வளர்ந்தது எப்படி என்பதை அறியப்பட்ட விளையாட்டுத்துறை எழுத்தாளர் குலு எசக்கியேல் தனது அளவான, சிறப்பான எழுத்தால் சொல்கிறார்.‘அதிரடி தோனி!’, இந்திய கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதை. இந்தியாவுக்கு உலக ட்வெண்டி20 கோப்பையைப் பெற்றுக்கொடுத்தபிறகும், தனது புகழ்-பாடும் ரசிகர்களிடம், ‘நான் ராஞ்சியிலிருந்து வந்த அதே பையன்-தான்’ என்று சொல்லும் இளைஞனின், மனத்தை வசீகரிக்கும் கதையும்கூட.