Description
இளம்பிறை தன் திருவாரூர் சாட்டியக்குடி கிராமத்து உழைக்கும் பெண்களை இந்தப் புத்தகத்துள் ரத்தமும் சதையுமாக உணர்வும் உயிருமாகக் கொண்டுவந்து பேசவும் உரையாடவும் விட்டிருக்கிறார். இந்த நூலின் மிக உயிர்ப்பான பகுதியாக இதை என் வாசக அனுபவமாக உணர்கிறேன் இளம்பிறை சித்தரிக்கும் கிராமம் தம் அரசுகளால் அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்ட கிராமமே அல்லாமல், 70கள், 80கள் காலத்துத் தமிழ் சினிமா சித்தரித்த கிராமங்கள் அல்ல, சிவந்த நிறமுள்ள அழகிகள் ஊருக்குள் வருகிற வாத்தியார்களைக் காதலிக்க அங்கே காத்திருப்பதில்லை. அவருடைய குரலின் தொனி பாசாங்கற்று உண்மையுடன் ஒலிக்கிறது.