Description
இந்த நாவலின் இரு நாயகர்களான சத்யன் குமாரும், கோபாலும் சினிமாக்காரர்களானாலும் ஆயிரமாயிரமாண்டு மரபுத் தொடர்ச்சியில்தான் இருக்கிறார்கள். இந்திய மரபில் தோழமைக்கு விசேஷ இடம் உண்டு. கிருஷ்ணன் - அர்ச்சுனன், கர்ணன் - துரியோதனன், விக்கிரமாதித்தன் - பட்டி, காளிதாசன் - போஜன், சீநக்கன் - பொய்யாமொழி, பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன், தேசிங்கு ராஜன் - முகமதுகான், ராமகிருஷ்ணர் - கேசவசந்திரர், ராமகிருஷ்ணர் - விவேகானந்தர் என இப்பட்டியல் நீண்டு போகிறது. மேலைய கலாச்சாரத்தில் இதைத் தகாத உணர்வாகக்கூட நினைக்கக்கூடும். ஆனால் இந்த உறவு உன்னத நிலைக்கே எடுத்துச்செல்வதை நம் வரலாறும் நம்பிக்கையும் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்துகின்றன.அத்தகையதோர் உறவு பற்றிய கதைதான் ‘மானசரோவர்.’