Description
மாதொருபாகன்' முடிவு இரு கோணங்களை கொண்டது. அதில் ஒன்றைப் பின்பற்றி விரிந்து செல்கிறது ‘ஆலவாயன்’. தன்னளவில் முழுமைபெற்றிருப்பதால் இதைத் தனித்தும் வாசிக்கலாம். ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் மன உணர்வுகளையும் காணும் நோக்கு இந்நாவல்.ஆண மையமிட்டதாகவே பெண்ணுலகு இருப்பினும் சுய செயல்பாட்டுக் களம் அமையும்போது எல்லாவற்றையும் கடந்து தனக்கான தேர்வுகளைச் சுதந்திரமாக மேற்கொள்ளுதல், நம்பிக்கைகளாலும் சடங்குகளாலும் கட்டப்பட்டிருக்கும் சமூகவெளியை அதன் போக்கிலேயே வீச்சுடன் எதிர்கொள்ளுதல் முதலிய இயல்புகளைச் சம்பவங்களாகவும் எண்ணங்களாகவும் காட்டுகிறது இது.