Description
தமிழில்: கே.ஜி.ஜவர்லால்விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், 2009 கோடையில் கொல்லப்பட்டார். இலங்கையில் நடந்த விடாப்பிடியான, சிக்கல் நிறைந்த போர் ரத்தமயமான முடிவுக்கு வந்தது. சுமார் 30 வருடங்களாக நடந்த போரின் கொடூரக் கரங்கள் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் தன் கோர நகத்தைப் பதித்திருக்கிறது. தேசம் முழுவதிலுமான பௌத்த மடாலயங்கள், மத்திய இலங்கையின் இனிமையான மலைப்பிரதேசங்கள், கிழக்கின் மட்டக்களப்பு திரிகோணமலைக் கடற்கரை, வெப்பம் மிகுந்த வடக்கு என அனைத்துப் பகுதிகளிலும் போரின் தடம் அழுந்தப் பதிந்திருக்கிறது. போரின் செய்நேர்த்தி மிகுந்த கொடூரத்திலிருந்து தப்பிய இடங்கள், மனிதர்கள் என்று எதுவுமே அங்கு இல்லை.இப்படியான கசப்பு மிகுந்த மோதலுக்கு உள்ளான தேசத்தில் இயல்பு வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? தேசத்தின் ஆன்மாவுக்கு என்ன நடந்திருக்கிறது? இலங்கைப் போரைப் பற்றியும் அது மாற்றி அமைத்த மனித வாழ்க்கை பற்றியும் சமந்த் அருமையான சித்திரத்தைத் தீட்டியிருக்கிறார். ஆதிகாலப் போர்களில் தொடங்கி பல்வேறு கால-கட்டங்களில் நடந்த பல்வேறு யுத்தங்களினூடாக, சோர்ந்து, சிதிலமடைந்து கிடக்கும் இன்றைய இலங்கையின் சரித்திரத்தை நம் கண்முன் கொண்டுவந்துநிறுத்தியிருக்கிறார்.மக்கள் இந்த வன்முறையை எப்படி எதிர்கொண்டார்கள்; தேசமும் மதமும் எப்படி இணைந்து இந்தப் போரை நடத்தியிருக்கின்றன; பலம் பொருந்தியவன் கொடூரமானவனானது எப்படி; வெற்றியானது நினைவுகளை எப்படி மாற்றியமைக்கிறது; சரித்திரத்தை எப்படி-யெல்லாம் புதைக்கிறது போன்றவற்றைக் களப்பயணங்கள் உரையாடல்கள் மூலமாக அலசி ஆராய்கிறார் சமந்த் சுப்பிரமணியன்.இன்னும் எரிந்து அடங்காத இலங்கையை மனிதாபிமான நோக்கில் அலசிப் பார்க்கும் This Divided Island நூலின் தமிழாக்கம்.