பண்டைய நாகரிகங்கள்


Author: S.L.V. மூர்த்தி

Pages: 208

Year: 2014

Price:
Sale priceRs. 265.00

Description

கலை, இலக்கியம், அறிவியல்,தொழில்நுட்பம், அரசியல், சமூக வாழ்க்கை என்று ஒவ்வொரு துறையிலும் மனிதகுலம் மாபெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியிருப்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது.கற்காலத்தில் தொடங்கி பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களைக் கடந்து, பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, பல யுத்தங்கள் புரிந்து, பல அழிவுகளைச் சந்தித்து, பல மேன்மையான படைப்-புகளை உருவாக்கி, போராடிப் போராடித்தான் இன்றைய நாகரிக உலகுக்கு நாம் வந்துசேர்ந்திருக்கிறோம்.இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் முக்கிய நாகரிகங்கள்: * சிந்து சமவெளி நாகரிகம்* எகிப்து நாகரிகம்* கிரேக்க நாகரிகம்* சீன நாகரிகம்* ரோம நாகரிகம்* சுமேரிய நாகரிகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் உருவாக்கிய கதைகளும், கண்டு-பிடிப்புகளும், கட்டடங்களும், எழுத்து முறையும், நிர்வாக அமைப்பும், போர்க்கருவிகளும், உற்பத்தி முறைகளும், சிகிச்சை-களும், சட்டங்களும் காலத்தை வென்று இன்றும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. எஸ்.எல்.வி. மூர்த்தியின் இந்தப் புத்தகம் பண்டைய நாகரிகங்களின் வரலாற்றைச் சுவைப்பட நமக்கு அறிமுகம் செய்துவைக்கிறது. பரவசமளிக்கும் ஒரு புதிய பயணத்தின்மூலம் ஒரு பழம்பெரும் உலகுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

You may also like

Recently viewed