Description
இனக்குழுக்களாகத் தோற்றம் பெற்ற தமிழினம் பண்பாடு, சமயம், பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பொருளாதாரம், நிர்வாகம் என்று பல தளங்களில் தம்மைச் செழுமைப்-படுத்திக்கொண்ட காலகட்டம் சங்க காலம். வரலாற்றின் மிக அடிப்-படையான, மிக முக்கியமான காலகட்டமாக இருந்த-போதிலும் சங்க காலம் பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே நம்மிடம் உள்ளன. அவற்றிலும் அதீதப் புகழ் பாடும் பதிவுகளே அதிகம். இந்தப் புத்தகம் நடுநிலையுடன் சங்க காலத்தை ஆராய்ந்து தமிழர்களின் வாழ்க்கை முறையை மிகையின்றிப் பதிவு செய்கிறது.மன்னர்கள், புலவர்கள், கலைஞர்கள் ஆகியோரைப் பற்றி மட்டுமின்றி சாமானியர்களின் வாழ்க்கைமுறை, அவர்களுடைய உறவுகள், பண்டிகைகள், கலாசாரம், தொழில்கள், மத நம்பிக்கைகள் என்று ஒரு வண்ணமயமான சித்திரத்தையும் இந்தப் புத்தகம் வழங்குகிறது. சங்கத் தமிழர்கள் வந்தேறிகளா? தமிழ்மொழி தோன்றியது எப்போது? குமரிக்கண்டம் இருந்ததா? கடவுள் நம்பிக்கை எப்படித் தோன்றியிருக்கும்? தமிழர்கள் காதலை வரவேற்றவர்களா? சங்க காலத் தமிழர்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்தனரா? என்பன உள்ளிட்ட பல கேள்விகளையும் எதிர்கொண்டு விவாதிக்கிறது.போர், அமைதி, காதல், கலை, அறம், பொருள், வணிகம் என்று சங்க காலத்தைத் தீர்மானித்த அனைத்து அம்சங்களையும் குறித்த எளிமையான வரலாற்றை சுவைபட அறிமுகப்படுத்தியுள்ளார் முனைவர் ப. சரவணன். இவருடைய முந்தைய நூல், இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்.